உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சம்மாந்துறை போன்று கல்முனை மக்களும் பொருத்தமான தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
21 பார்வைகள்

சம்மாந்துறை மக்கள் நன்றியுள்ளவர்கள். அதுபோன்று அரசியல் ரீதியில் கல்முனை மக்களும் பொருத்தமான தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தேசிய மக்கள் முன்னணியின் ஸ்தாபகர், பொறியியலாளர் உதுமாங்கண்டு நாபீர் தெரிவித்தார்.

கல்முனை மாநகருக்கான இடைநிறுத்தப்பட்ட தேர்தல் நடைபெறும் என்ற நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொறியியலாளர் உதுமாங்கண்டு நாபீர் மேலும் குறிப்பிடும்போது,

கல்முனை மாநகரின் கடந்த கால அரசியல் நிலைமைகள் அபிவிருத்திகள் எல்லாவற்றிலும் மக்கள் வெறுப்படைந்து காணப்படுகின்றனர். அரசியல்வாதிகளின் பொடுபோக்கான நிலைமைகள் இதற்கு காரணமாகும்.

கல்முனை மாநகர சபையில் இடம் பெற்ற ஊழல் தொடக்கம் கல்முனை மாநகர அபிவிருத்தி மாயைகள் மக்கள் மனங்களை பெரிதும் புண்படுத்தியதை நாங்கள் அறிவோம்.

எனவேதான் வளமான மாநகரை, சாய்ந்தமருது பிரதேசத்தை, கல்முனை பிரதேசத்தை மற்றும் தற்போதைய கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட ஏனைய பிரதேசங்களை ஆளக்கூடிய, செயற்பாட்டு ராஜாக்களை கொண்ட கட்சியாக, குழுவாக எமது கட்சி இம்முறை தேர்தல் களத்தில் நிற்கும்.

எமக்கு கிடைக்கின்ற ஒவ்வொரு வாக்கும் மக்களின் சேவைகளை முன்னிறுத்தி செயல்படும் சேவகர்களை உருவாக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

அது போன்று சம்மாந்துறை மக்கள் எமது செயற்பாட்டில் நம்பிக்கை வைத்து வாக்களித்ததன் விளைவே கடந்த உள்ளூராட்சி தேர்தலில் நாம் சார்ந்த சுயேட்சை குழு, ஒரு உறுப்பினரை பெற்றது.

அது போன்று சாய்ந்தமருந்து தாய் பிரதேச மக்களும் எமது கைகளை பலப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

இந்த நிலையில் எமது பிரதேச படித்த இளைஞர் யுவதிகள் எமது அணியில் இணைந்து தேர்தலில் களமிறங்க விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

மிக விரைவில் அவர்களை நாம் நினைத்துக் கொண்டு  ”மக்களுக்காகவே நாம்” என்ற தொனிப் பொருளில் எமது சேவையை தொடர எண்ணி உள்ளோம் என்றும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

65 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

78 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0