வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான வாகனம்.!
நுவரெலியா நானுஓயா பிரதான வீதியில் இன்று(09) காலை வேளையில் டிப்பர் ஒன்று வீதியை விட்டு விலகி மண் மேட்டில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் உயிர் ஆபத்துக்கள் மற்றும் காயங்கள் ஏற்படவில்லை என நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து நானுஓயா போக்குவரத்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

