உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

தேர்தல் நடந்தால் எட்டு மாகாணங்களில் பொதுஜன பெரமுனவே ஆட்சியமைக்கும்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
16 பார்வைகள்

“நாட்டில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் வடக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய 8 மாகாணங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்து ஆட்சியமைக்கும்” என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்ததாவது:-
“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு மக்கள் மத்தியில் ஒவ்வொரு நாளும் ஆதரவு மிக வேகமாகப் பெருகி வருகின்றது. குறிப்பாக, நாட்டின் கிராமிய மட்டங்களில் பொதுஜன பெரமுனவுக்குப் பேராதரவு கிடைத்துள்ளது என்பதை எங்களால் களத்தில் நேரடியாகக் காண முடிகிறது. எனவே, எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள அச்சப்படும் நிலையில் எங்களது கட்சி இல்லை.

அதனால்தான், இழுபறியில் உள்ள மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு தற்போதைய அரசுக்கு மிகவும் துணிச்சலாகவும், பகிரங்கமாகவும் நாங்கள் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகின்றோம்.

அரசியல் இலாபங்களுக்காகக் கட்சி தாவும் மக்கள் பிரதிநிதிகளின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளைப் பறிக்கக்கூடிய புதிய சட்ட மூலங்களுக்கு நாங்கள் ஒருபோதும் எதிரானவர்கள் அல்ல. சுயநல அரசியலைத் தடுக்கும் அத்தகைய சட்ட மூலங்களை நாடாளுமன்றத்தில் நாங்கள் நிச்சயமாக முழுமையாக ஆதரிப்போம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

65 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

78 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0