உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளைத் திசைதிருப்ப சதி.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
19 பார்வைகள்

“உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் குறித்துத் தற்போது தீவிரமடைந்து வரும் சட்ட விசாரணைகளுக்கு, பல்வேறு வழிகளில் முட்டுக்கட்டைகளும் தடைகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த விசாரணைகள் முழுமையாகத் தடுக்கப்பட்டுவிடுமோ என்ற பயமும் சந்தேகமும் எமக்கு எழுந்துள்ளது” என்று கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் சுரேஷ் சலேயை விடுதலை செய்யக் கோரி கொழும்பில் நடத்தப்படும் சத்தியாக்கிரகப் போராட்டம் குறித்து ஊடகங்களுக்கு விசேட கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
“நாங்கள் கத்தோலிக்க திருச்சபை என்ற ரீதியில் எப்போதுமே இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த, காயமடைந்த மற்றும் இந்தத் தாக்குதல் காரணமாகப் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகிய, பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்காகவே தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகின்றோம்.

உயிர்த்த ஞாயிறன்று திருப்பலியில் கலந்துகொள்வதற்காகத் தேவாலயங்களுக்குச் சென்ற மக்கள், அதேபோன்று சில ஹோட்டல்களில் தங்களது காலை உணவை உட்கொள்வதற்காகச் சென்ற வெளிநாட்டவர்கள் உட்பட சுமார் 270 இற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். அந்த மனிதர்கள் செய்த தவறு என்ன? இப்போது ஏழு வருடங்கள் ஆகின்றன. இந்த மக்களின் துக்கத்தையும் வேதனையையும் வெறுமனே பண இழப்பீடு வழங்குவதன் மூலம் மட்டுமே தணித்துவிட முடியாது என்பதை அனைவரும் அறிவர்.

இப்போது நீதிமன்ற வழக்கு விசாரணைகள் ஓரளவு நடைபெற்று வருகின்றன. ஆனால், இப்போது மற்றொரு பிரதான கேள்வி எழுந்துள்ளது. இந்தத் தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில், அதாவது இந்த குண்டுதாரிகளுக்குப் பின்னால், இந்த குண்டு வெடிப்புகளுக்குப் பின்னால் ஒரு பாரிய ‘அரசியல் சதி’ இருந்தது என்பதாகும். அப்படியானால், அவர்களின் உண்மையான நோக்கம் என்னவாக இருந்தது? அவர்கள் யார்? இதில் உள்ள உண்மை என்ன? இதற்குப் பின்னால் இருந்து இயக்கியவர்கள் யார்? இதனைத் திட்டமிட்டவர்கள் யார்?

இந்த தற்கொலை குண்டுதாரிகள் குழுவுக்கு இந்த குண்டுத் தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்துவதற்குப் பின்னணியிலிருந்து உதவியாக இருந்த அதிகார வர்க்கக் குழு எது? என்பதை உண்மையாகக் கண்டறிய வேண்டியது அவசியமாகும். அதனைக் கண்டறிவது, இதில் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை உரிமையாகும்.

இந்த விசாரணைகள் கடந்த சில காலமாக அரசியல் காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்து, தற்போது இந்த விசாரணைகள் மீண்டும் சுயாதீனமாக ஆரம்பிக்கப்பட்டு, சட்டப்படி செயற்படத் தொடங்கியதும், நாட்டில் பல தரப்பினர் திடீரெனப் பதற்றமடைந்துள்ளனர்.

போராட்டங்கள் என்ற பெயரில் விசாரணைகளைத் திசைதிருப்ப முயற்சி செய்கிறார்கள் என்றால், அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் மிக மோசமான அநீதியாகும்.

இது அந்த மக்களின் கண்ணீருக்கும், அவர்கள் தேவாலயங்களில் சிந்திய இரத்தத்துக்கும் செய்யப்படும் துரோகமாகும். எனவே, இந்த விசாரணைகளுக்கு எந்தவொரு தரப்பிலிருந்தும் எந்தவிதத் தடையுமின்றி, எவ்விதத்திலும் விசாரணைகளை நிறுத்தாமல் நேர்மையாக முன்னோக்கித் தடையின்றி கொண்டு செல்ல வேண்டும் என்பதே கத்தோலிக்க திருச்சபையின் இறுதி கோரிக்கையாகும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

66 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

78 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0