உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

செம்மணி அகழ்வில் வெளிவரும் கொடூர உண்மைகள்; ஒரே நாளில் மட்டும் 16 மனித எலும்புக்கூடுகள்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
22 பார்வைகள்

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் போது, நேற்று ஒரே நாளில் மேலும் 16 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 318 ஆக உயர்வடைந்துள்ளது.

நீதிமன்ற உத்தரவின் பேரில், விசேட நிபுணர்களின் முன்னிலையில் நேற்று அகழ்வுப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன.

நேற்றைய அகழ்வாராய்ச்சியின் போது புதிதாக 16 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதுடன், ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டிருந்த எலும்புக்கூடுகளின் 4 தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, செம்மணி மனிதப் புதைகுழியின் தடயவியல் அகழ்வாய்வுத் தளம் ஒன்று மற்றும் இரண்டு ஆகிய இரண்டு பிரிவுகளிலிருந்தும் மொத்தமாக இதுவரை 318 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 302 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் இதுவரை முழுமையாக மீட்கப்பட்டுப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

நேற்றைய அகழ்வுகளின் போது, மனித உடல்கள் மிகக் கொடூரமான முறையில் புதைக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும் வகையிலான பல தடயங்கள் சிக்கியுள்ளன. குறிப்பாக, எலும்புக்கூட்டுத் தொகுதிகள் ஒன்றோடு ஒன்று தொடுகையுற்ற (ஒன்றின் மேல் ஒன்றாகப் பின்னப்பட்ட) நிலையில் இரு வெவ்வேறு இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவற்றில் ஒரு பகுதியில் ஆறு எலும்புக்கூட்டுத் தொகுதிகளும், பிறிதொரு பகுதியில் நான்கு எலும்புக்கூட்டுத் தொகுதிகளும் ஒன்றோடு ஒன்று நெருக்கமாகத் தொடுகையுற்றவாறு கண்டறியப்பட்டுள்ளன. இதில் விசேடமாக, அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதிகளில் ஒன்று, அதன் கால்கள் இரண்டும் பின்பக்கமாக மடிக்கப்பட்ட நிலையிலேயே புதைக்கப்பட்டுள்ளமை தடயவியல் நிபுணர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர, மனித என்புகளின் எச்சங்கள் அடங்கிய விசேட குவியல் ஒன்றும் நேற்றைய அகழ்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் உள்ள மண்ணைச் சீர்செய்து, எச்சங்களைச் சேதமடையாமல் சுத்தப்படுத்தும் பணிகளில் அகழ்வாராய்ச்சிப் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

66 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

78 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0