ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து; இருவர் உயிரிழப்பு.!
சிலாபத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலுடன் முச்சக்கர வண்டி ஒன்று இன்று (09) காலை மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கப்புவத்தை மற்றும் கந்தானை ஆகிய நிலையங்களுக்கு இடைப்பட்ட ரயில் கடவையை முச்சக்கர வண்டி கடக்க முயன்ற போதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்ததுடன், அதில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர்.