உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

அராலியில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
18 பார்வைகள்

யாழ்ப்பாணம் அராலியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த குடும்பஸ்தர் கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு தொடக்கம் நேற்று அதிகாலை வரை உறங்கம் இல்லாமல் இருந்துள்ளார். இதன்போது அவரது தாயார் மற்றும் மனைவியும் உடனிருந்தனர்.

பின்னர் அதிகாலை 3.00 மணியளவில் தான் உறங்கப்போவதாகவும், அவர்களையும் உறங்குமாறு கூறிய நிலையில் அவர்கள் உறக்கத்துக்கு சென்றனர்.

பின்னர் சிறிது நேரத்தில் கண் விழித்த தாயார் தனது மகனை காணவில்லை என தேடியபோது வீட்டினுள் சடலமாக தூக்கில் தொங்கியபடி காணப்பட்டார்.

அதனை தொடர்ந்து வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இந்நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸாரும் தடயவியல் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

மேலும், மல்லாகம் நீதிமன்ற நீதிவானும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலைமையை பார்வையிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

66 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

78 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0