உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

வல்வெட்டித்துறையில் போராட்டக்காரர்களை அச்சுறுத்திய பொலிஸார்!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
28 பார்வைகள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைப் பாடகர் சங்கீத்ஷனை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, வல்வெட்டித்துறை பொலிஸாரின் கடுமையான மிரட்டல்களையும் கடந்து இன்று முற்பகல் வல்வெட்டித்துறைச் சந்தியில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் எழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.

வல்வெட்டித்துறையின் சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சொல்லிசைப் பாடகர் சங்கீத்ஷனை நிபந்தனையின்றி விடுதலை செய்யக் கோரியும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்க வலியுறுத்தியும், வல்வெட்டித்துறை பொலிஸாரின் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் உணர்ச்சிப் பூர்வமாகக் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்தப் போராட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்திருந்த சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களை, நேற்று வல்வெட்டித்துறைப் பொலிஸார் நேரில் அழைத்து கடுமையான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கியிருந்தனர்.

“இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழேயே உங்களையும் கைது செய்வோம்” எனப் பொலிஸார் மிரட்டியிருந்த நிலையிலும், அதனைப் பொருட்படுத்தாது பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் திரண்டு வந்து இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தினர்.

இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராசா நிரோஷ், உப தவிசாளர் தர்மலிங்கம் ஜனார்த்தனன், வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் பங்கேற்ற அரசியல் மற்றும் சிவில் சமூகத் தரப்பினர், எவ்வித அடிப்படைகளுமின்றிப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தித் தமிழ் இளைஞர்கள் மற்றும் கலைஞர்கள் மீதான அடக்குமுறைகள் தொடர்வதைக் கடுமையாகக் கண்டித்தனர். அத்துடன், எவ்விதக் குற்றமுமற்ற பாடகர் சங்கீத் உடனடியாகச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பதைப் பாதுகாப்புத் தரப்பினரும் தற்போதைய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

66 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

78 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0