உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி பேருந்தை செலுத்திய சந்தேகநபர் கைது.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
17 பார்வைகள்

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி, பிரதான வீதியில் அதிக பயணிகளுடன் பேருந்தை செலுத்திய சந்தேகநபர் ஒருவர் நேற்று (07) பிற்பகல் ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக ஹட்டன் பொலிஸ் தலைமையக பிரதம பொலிஸ் ஆய்வாளர் டபிள்யூ.ஆர்.ஏ.டி. சுகததாச தெரிவித்தார்.

சந்தேகநபர் ஹட்டன் – டிக்கோயா சலங்கந்த பகுதியிலிருந்து சாரதி அனுமதிப்பத்திரமின்றி பேருந்தை இயக்கி வந்துள்ளதாகவும், இடைநடுவில் பேருந்து சாரதியிடம் ஒப்படைக்கப்படும் என்ற தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஹட்டன் – சலங்கந்த பாதையானது அதிக ஆபத்தான செங்குத்து மற்றும் வளைவுகள் கொண்டது எனவும், இதனால் பயணிகளின் நலன் கருதி விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பு பேருந்து குறித்த நடவடிக்கை எடுத்ததாக பொலிஸ் தலைமையகத்தின் பிரதம ஆய்வாளர் தெரிவித்தார்.

எனவே, சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் தனியார் பேருந்தை பிரதான வீதிகளில் செலுத்திய குற்றச்சாட்டிலும், சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் பேருந்து ஒன்றினை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் பேருந்தின் உரிமையாளர் மீது ஹட்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

67 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

52 0 0