உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டைத் தொகுதி நிர்வாகத் தெரிவின் முறைகேடு; கட்சி உறுப்பினர்கள் சீற்றம்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
17 பார்வைகள்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டைத் தொகுதியின் முறைகேடான நிர்வாகத் தெரிவு தொடர்பாக வட்டுக்கோட்டைத் தொகுதியின் மூத்த கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட மூலக்கிளை உறுப்பினர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட கிளைத் தலைவர்/ செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்கள். இதன் பிரதிகள் மத்திய செயற்குழுவின் சகல உறுப்பினருக்கும், கட்சியின் தலைவருக்கும் மத்திய செயற்குழுவில் இவ்விடயத்தை முன்னிலைப்படுத்தக் கோரியும் பிரதியிடப்பட்டுள்ளது.

யாப்புக்கு முரணான வகையில் தொகுதி நிர்வாக தெரிவு இடம்பெற்றது. உரியவகையில் முறைப்படி செயல்படுத்தவில்லை, மூலக்கிளையின் நிர்வாகிகளுக்கு உரிய அழைப்பு விடுக்கவில்லை. தமக்கு விரும்பிய உறுப்பினர்களுக்கு தொலைபேசி மூலம் அழைத்து கட்சியின் பதில் தலைமைகளால் கூட்டம் நடைபெற்று முறைகேடான முறையில் தெரிவு இடம்பெற்றது. இதனை ஆட்சேபித்து கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுக்கு உரிய விடயத்தை தெரியப்படுத்தியுள்ளனர்.

கூட்டம் முறைகேடான முறையில் இடம்பெற்றது என்பதற்கான உரிய ஆதாரங்கள் ஊடகங்களிலும் வெளிவந்த நிலையில் முறைகேடுகள் நடைபெற்றது, பிழையான வகையில் தெரிவு இடம்பெற்றது என்பதற்கு ஆதாரமான சான்றிதழ் தங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

67 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

52 0 0