உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சிறுமி துஷ் – பிரயோகம்; தாய் மற்றும் தாயின் கள்ளக்காதலனுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
31 பார்வைகள்

கட்டிலில் தன்னுடன் நித்திரை செய்த மகளை கள்ளக்காதலனுடன் இணைந்து பலாத்காரமாக வாயை மூடி துஷ்பிரயோகம் செய்தமைக்காக தாய் மற்றும் கள்ளக்காதலனான சந்தேக நபர் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை பகுதியில் 2026.03.24 அன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் 3 மாத காலமாக தலைமைறைவாகி இருந்த சந்தேக நபர் உட்பட சிறுமியின் தாய் ஆகியோர் கைது செய்யப்பட்டு கல்முனை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போது 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

50 வயது சந்தேகநபர் சமூக வலைத்தளங்கள் (IMO /WHATSAPP ) ஊடாக திருமணமான பெண் ஒருவருடன் தொடர்பினை மேற்கொண்டுள்ளார்.

அப்பெண் தம்புள்ளை கலேவலை பகுதியைச் சேர்ந்தவராவார். அப் பெண்ணிற்கு ஆண் 18 வயதுடைய ஆண், 14 வயதுடைய பெண் இருக்கின்றனர். இதன்போது அப்பெண் சமூக வலைத்தளம் ஊடாக தொடர்பு கொண்டு தனது 14 வயது பெண் பிள்ளையை தன்னுடன் அழைத்துக்கொண்டு அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு சென்று சந்தேக நபரான கள்ளக்காதலனை சந்தித்துள்ளார். இதன்போது குறித்த தாயும் பிள்ளையும் தங்குவதற்காக வாடகைக்கு வீடு ஒன்று கிராம சேவகரின் உதவி ஊடாக பெறப்பட்டு அங்கு தங்கி இருந்துள்ளனர்.

குறித்த வாடகை வீட்டில் உள்ள ஒரு கட்டிலில் குறித்த மூவரும் உறங்கியதுடன் அவ்வேளை தாயுடன் கள்ளக்காதலன் நள்ளிரவு உடலுறவில் ஈடுபட்டுள்ளார். ஒரு சில மணித்தியாலங்களின் பின்னர் அருகில் இருந்த 14 வயது சிறுமியுடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார். இதன்போது அச்சிறுமி அபயக்குரல் எழுப்பி கத்தியபோது தாய் உடனடியாக செயற்பட்டு சிறுமியின் வாயினை பலவந்தமாக மூடியதுடன் கள்ளக்காதலனுக்கு ஒத்தாசை செய்துள்ளதாக அம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டிற்கமைய செயற்பட்ட பொலிஸார் சுமார் 3 மாதங்களின் பின்னர் தலைமைறைவாகி இருந்த 50 வயதான சந்தேக நபரை வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள ஆலங்குளம் பகுதியில் 03.06.2026 அன்று கைது செய்துள்ளனர்.

தொடர் விசாரணையின் பின்னர் பிரதான சந்தேக நபரான கள்ளக்காதலன் உட்பட குறித்த செயற்பாட்டிற்கு கள்ளக்காதலனுக்கு உடந்தையாக இருந்த தாய் ஆகியோரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் வழிகாட்டலில் கல்முனை பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி தலைமையில் செயற்பட்ட கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரி திருமதி எஸ்.பி.என்.எம். சுவர்ணகாந்தி, உப பொலிஸ் பரிசோதகர் குமாரசிங்க, கல்முனை பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொலிஸ் ஷார்ஜன் ஏ. ஆதம்பாவா (44138) மற்றும் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி வெளி மாவட்டம் ஒன்றில் சிறுவர் நன்னடத்தை நிலையம் ஒன்றில் வைத்திய பரிசோதனைக்காக தங்க வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

67 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

52 0 0