உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சட்டமா அதிபரின் பரிந்துரைக்கு அமைய மகாணசபைத் தேர்தலை விரைந்து நடத்துக – சுரேந்திரன் கோரிக்கை!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
30 பார்வைகள்

சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைகளுக்கு அமைய அரசு தேர்தல்களை விரைந்து நடத்த வேண்டும் என ரெலோவின் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

இதில் சட்டமா அதிபரினாலேயே பரிந்துரைக்கப்பட்ட 2017 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மாகாண சபை தேர்தல்கள் திருத்தச் சட்டத்தை இரத்து செய்து 1988 சட்டத்தின் கீழ் இருந்த முந்தைய தேர்தல் முறைக்கு திரும்புதல் மூலம் மாகாண சபை தேர்தலை விரைந்து நடத்த வழி செய்து உள்ளது.

இருப்பினும் அந்த பரிந்துரையை கருத்தில் கொள்ளாது அரசரப்பு புதிய திருத்தச் சட்டம் ஒன்றை கொண்டு வர வேண்டும் என்றும் அதில் பெண்களுக்கு இளைஞர்களுக்கும் அதிக ஒதுக்கீடுகளை செய்வது பற்றிய புதிய திருத்தச் சட்டத்தை எப்படி கொண்டு வருவது என்பது ஆலோசிக்க வேண்டும் என்று கூறுவது காலத்தை வீணடிக்கும் செயல்பாடாகும்.

ஏற்கனவே தமிழர்கள் தரப்பு கூறி வருகின்ற பழைய தேர்தல் முறையின் மூலம் தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக சட்ட அதிபர் திணைக்களமும் பரிந்துரை செய்துள்ளது. இதைக் கருத்தில் கொள்ளாது அவர்கள் பரிந்துரை செய்த மற்ற விடயங்களை அரசு கவனத்தில் எடுப்பது என்பது மாகாண சபை தேர்தல்களை பின் போடுவதற்கு முயற்சி செய்வதாகவே அமையும்.

சட்டமா அதிபரினால் பரிந்துரைக்கப்பட்ட முன்மொழிவுகளில் ஒன்று

2017-ஆம் ஆண்டின் மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டம், எண் 17-ஐ ரத்து செய்து, 1988 சட்டத்தின் கீழ் இருந்த முந்தைய தேர்தல் முறைக்குத் திரும்புதல்;

2017 ஆம் ஆண்டு திருத்தம் இருந்தபோதிலும், முந்தைய தேர்தல் சட்டத்தை மீண்டும் வருங்கால அடிப்படையில் நடைமுறைக்குக் கொண்டுவருதல்;

மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தின் பிரிவு 3A(14)-இன் கீழ், (தொகுதி வரையறை) எல்லைகள் மீள்நிர்ணய குழு தனது அறிக்கையைத் தேவையான காலத்திற்குள் சமர்ப்பிக்கத் தவறியதால், தற்போதுள்ள 2017 திருத்தத்தை இப்போது முழுமையாகச் செயல்படுத்த முடியாது என்று சட்டமா அதிபர் கூறிய விடயம் ஏற்கனவே தெரிந்ததே.

அதனாலே அதை ரத்து செய்து பழைய முறைக்கு செல்வதன் மூலம் மாகாண சபைதேர்தல்களை விரைந்து நடத்த முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

67 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

52 0 0