உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி போராட்டம்!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
35 பார்வைகள்

நானாட்டான் டிலாசால் கல்லூரியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்யக் கோரி அக் கல்லூரி அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் திங்கட்கிழமை (8) காலை பாடசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டமானது நானாட்டான் டிலாசால் கல்லூரியில் ஊடகம் தொடர்பான கற்கை ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்யக் கோரி பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரும் மாணவர்களின் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.

குறித்த ஆசிரியர் பாடசாலைக்கு நியமிக்கப் பட்டதில் இருந்து ஊடகம் தொடர்பான கற்றலில் பின்னோக்கி காணப்படுவதாகவும் மாணவர்கள் ஊடக கற்றலுக்கு செல்ல மறுப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேலும் குறித்த ஆசிரியர் பாடசாலை நிர்வாகத்திற்கும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினருக்கும் ஒத்துழைப்புகள் வழங்குவதில்லை எனவும் நிர்வாகச் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக குழப்பம் விளைவித்து வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.

குறித்த ஆசிரியர் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்ட போதும் இதுவரை எந்த விதமான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றும் அதனால் இந்த அமைதி வழியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கலந்து கொண்ட பழைய மாணவர்கள் மற்றும் அபிவிருத்தி சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அங்கு வருகை தந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜெகதீஸ்வரன் போராட்டத்தில் ஈடு பட்டவர்களுடன் கலந்துரையாடிய நிலையில் குறித்த ஆசிரியர் இடமாற்றம் தொடர்பாக பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினரால் மகஜர் கையளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மகஜரை பெற்றுக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் குறித்த விடயம் தொடர்பாக துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு இரு வாரங்களில் தீர்வை பெற்றுத் தருவதாக தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து வலயக்கல்வி அலுவலகம் சார்பாக வருகை தந்த அதிகாரிகளிடமும் தமது கோரிக்கை அடங்கிய மகஜர் கை யளித்ததோடு,தமது போராட்டத்திற்கு உரிய தீர்வு கிடைக்காது விட்டால் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாகவும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு குறித்த ஆசிரியரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

குறித்த போராட்டத்தில் பெற்றோர்கள் ,பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் ,பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

67 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

52 0 0