உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மத்திய மலைநாட்டில் கனமழை – நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
31 பார்வைகள்


மத்திய மலைநாட்டில் மேற்குச் சரிவுகளில் பல வாரங்களாகப் பெய்து வரும் கனமழையால், தேசிய நீர்மின் சக்தி அமைப்பிற்குச் சொந்தமான மவுசாக்கலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியாளர்களின் கூற்றுப்படி, இன்று காலை (08) ம் திகதி 08.00 மணி நிலவரப்படி, மவுசாக்கலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் முறையே 18 மற்றும் 12 அடியாக, நிரம்ப வேண்டியுள்ளது.

கடந்த சில மாதங்களாக மத்திய மலைப்பகுதிகளில் உள்ள நீர்மின் நிலையங்களின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய மழை இல்லாததால், மவுசாக்கலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 50% குறைந்த நிலையில் காணப்பட்டது.

மவுசாக்கலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்கள், தேசிய நீர்மின் அமைப்பின் லக்ஷபானா, நியூ லக்ஷபானா, பொல்பிட்டியா, விமலசுரேந்திரா, கென்யோன் மற்றும் போர்டுலேண்ட் மின் நிலையங்களுக்கான முக்கிய நீர் சேமிப்பு நீர் தேக்கங்களாகும்.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மேலும் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து கொண்டே வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

67 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

52 0 0