உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

செம்பியன்பற்று மீனவர்களின் தீவிர முயற்சியில் கடலில் மாயமான மீனவர் உயிருடன் மீட்பு!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
23 பார்வைகள்

யாழ். வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கு பகுதியில் கடலுக்குச் சென்று காணாமல் போன மீனவர் ஒருவர், சக மீனவர்கள் மற்றும் கடற்படையினரின் தீவிர தேடுதல் வேட்டையின் மூலம் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரயவருவதாவது

பரபரப்பான சூழலும் தேடுதல் வேட்டையும்செம்பியன்பற்று வடக்கு பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் நேற்று (ஜூன் 7) இரவு வழமை போல் கடற்தொழிலுக்குச் சென்றுள்ளார்.

எனினும், நீண்ட நேரமாகியும் அவர் கரை திரும்பாததால் குடும்பத்தினரிடையே அச்சமும், அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலையும் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, செம்பியன்பற்று வடக்கு சென். பிலிப் நேரிஸ் கடற்தொழிலாளர் சங்கத்தினர் உடனடியாக களத்தில் இறங்கி தேடுதல் பணிகளை ஆரம்பித்தனர்.

இத்தேடுதல் முயற்சிக்கு கடற்படையினரும் தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.

இந்நிலையில் பல மணித்தியாலங்கள் நடுக்கடலில் முன்னெடுக்கப்பட்ட தீவிர தேடுதலின் பயனாக, கரை பகுதியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் தத்தளித்துக் கொண்டிருந்த குறித்த மீனவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு கரை சேர்க்கப்பட்டார்.

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் கடல் கொந்தளிப்புக்கு மத்தியிலும் மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்குக் பின்னால் உள்ள அவல நிலை குறித்தும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அன்றாட வாழ்க்கையை நகர்த்தவும், குடும்பப் பொருளாதாரத்தைக் கொண்டு செலுத்தவும் வேறு வழியின்றி, ஆபத்தான சூழலிலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இத்தகைய பொருளாதாரக் காரணங்களால், அண்மைக்காலமாக மீனவர்கள் கடலில் காணாமல் போகும் மற்றும் விபத்துக்களுக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்துச் செல்கின்றன.

அரசாங்கத்திற்கு விடுக்கப்படும் அவசர கோரிக்கைமீனவர்களின் இந்த அவல நிலைக்கு உடனடியாகத் தீர்வு காணவும், அவர்களின் உயிர்களையும் வாழ்வாதார உபகரணங்களையும் பாதுகாக்கவும் அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

67 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

52 0 0