உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

ஜூன் மாதம் 09ம் திகதி தொடக்கம் 12ம் திகதிவரை விசேட டெங்கு கட்டுப்பாட்டு வாரம் – அரசாங்க அதிபர் தெரிவிப்பு!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
23 பார்வைகள்

யாழ். மாவட்டத்தில் டெங்கு நுளம்பு ஒழிப்பிற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை எதிர்வரும் 09, 10, 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் முன்னெடுகவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் டெங்கு கட்டுப்பாட்டு நிலையில் அதிக ஆபத்துள்ள கரவெட்டி, பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கோப்பாய், சங்கானை, சாவகச்சேரி, நல்லூர், சண்டிலிப்பாய், தெல்லிப்பழை, உடுவில் ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் ஜீன் மாதம் 09ம் திகதி தொடக்கம் 12ஆம் திகதிவரை விசேட டெங்கு கட்டுப்பாட்டு வார நடவடிக்கைகள் செயற்படுத்தப்படவுள்ளது.

இதன்படி 09.06.2026ஆம் திகதி பொதுமக்களின் வீடுகள் மற்றும் சுற்றுச்சூழலிலும், 10.06.2026ஆம் திகதி மாவட்டத்தின் சகல அரச மற்றும் தனியார் அலுவலகங்களிலும், 11.06.2026ஆம் திகதி பாடசாலை மற்றும் சகல கல்வி நிறுவனங்களிலும், 12.06.2026ஆம் திகதி வர்த்தக நிலையங்கள், சந்தைகள், மதஸ்தலங்கள் மற்றும் பொது அமைப்புகள் சிரமதான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

67 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

52 0 0