உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் விசாரணை முன்னெடுப்பு

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
29 பார்வைகள்

குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தரின் மரணம் தொடர்பில் பல்வேறு மட்டங்களில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் உள்ள சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்படும் சிறைக் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (7) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

119 இலக்க முறைப்பாட்டிற்கமைய குடும்பப் பிரச்சினை தொடர்பில் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட குடும்பஸ்தர் சிறைக்கூடத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்திருந்தார்.

குறித்த உயிரிழப்பு தொடர்பில் பொலிஸார் குடும்பஸ்தர் அணிந்திருந்த சாரம் துண்டினை பயன்படுத்தி தூக்கிலிட்டு உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் குறிப்பிட்டுள்ளனர்.

அதே வேளை 65 வயது மதிக்கத்தக்க 6 பிள்ளைகளின் தந்தையான உயிரிழந்த குடும்பஸ்தரின் உறவினர்கள் சிலர் பொலிஸ் நிலையத்திற்கு வந்து தூக்கில் அவர் தொங்கி உயிரிழக்க வில்லை எனவும் உயிரிழந்தவரின் உடம்பில் காயங்கள் காணப்படுவதாகவும் எனவே நீதி வேண்டும் எனவும் கோஷம் எழுப்பி இருந்தனர்.

மேலும் மரணமடைந்த குடும்பஸ்தர் கடந்த 2 நாட்களுக்கு முன்னரும் குடும்ப பிரச்சினைக்காக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அதே பிரச்சினைக்காக மீண்டும் இரண்டாவது சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில வைத்திருந்த நிலையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் உயிரிழந்தவரின் சடலம் தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் மரண விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு எடுத்தச் செல்லப்படும் என பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த குடும்பஸ்தர் காரைதீவு 1 பிரிவு மாதவி வீதியைச் சேர்ந்த சாமித்தம்பி பாக்கியராசா ஆவார்.இவர் முன்னாள் ஓய்வு பெற்ற நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர் என் எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.

இந்நிலையில் சம்பவம் இடம்பெற்ற பொலிஸ் நிலையத்திற்கு அக்கரைப்பற்று பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.என்.பி டந்தநாராயண காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஐ.பி ஜெயரட்ண காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன் பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு உயிரிழந்த குடும்பஸ்தரின் மரணம் தொடர்பில் தற்போது பல்வேறு மட்டங்களில் மேலதிக விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

67 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

52 0 0