சுரேஷ் சலே வைத்தியசாலையில் அனுமதி.!
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.