உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பொருளாதார வெற்றியை அரசுகள் அல்ல தொழில்முனைவோரே தீர்மானிக்கிறார்கள்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
35 பார்வைகள்

தெற்காசிய பிராந்தியத்தின் எதிர்கால பொருளாதார வெற்றியை, அந்தந்த நாட்டு அரசுகளால் மாத்திரம் தீர்மானித்துவிட முடியாது என்றும், பிராந்தியத்தின் தொழில்முனைவோர், வணிக சமூகம் மற்றும் முதலீட்டாளர்களே அதனைத் தீர்மானிக்கின்றார்கள் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

கொழும்பு சின்னமன் லைஃப் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற ‘வெஸ்டிஜ் முதலீட்டாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள்’ மாநாட்டில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,
“இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே நீண்டகால கலாச்சார, ஆன்மீக மற்றும் பொருளாதார உறவுகள் காணப்படுகின்றன. தற்போதைய சூழலில், இரு நாடுகளுக்கும் இடையிலான ‘யுபிஐ’ பணப்பரிவர்த்தனை ஒருங்கிணைப்பு மற்றும் உத்தேசிக்கப்பட்டுள்ள மின்சக்தி இணைப்புத் திட்டங்கள் போன்ற முயற்சிகள் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளன. இது வர்த்தகம் மற்றும் முதலீடுகளுக்கு முன்னெப்போதும் இல்லாத புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

அண்மைக்கால பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில், வெறும் சுதந்திர சந்தை முறையை மட்டும் நம்பியிருக்க முடியாது. சுதந்திர சந்தையின் வினைத்திறனோடு, சமூக நீதி, வெளிப்படைத்தன்மை மற்றும் சம வாய்ப்புகளை உள்ளடக்கிய ‘சமூக சந்தைப் பொருளாதார’ முறையொன்றை நாம் கட்டியெழுப்ப வேண்டும்.

பொருளாதார முன்னேற்றத்தின் பலன்கள் சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள அனைத்து தரப்பினரையும் சென்றடையக்கூடிய, அனைவரையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியையே நாம் எதிர்பார்க்கின்றோம்.

தானியங்கிமயம் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் உலகம் வேகமாக மாறிவரும் தற்போதைய யுகத்தில், மனிதர்களுக்கு இடையிலான நம்பிக்கை, வலுவான நுகர்வோர் உறவுகள் மற்றும் தரமான சேவை என்பனவே எந்தவொரு வணிகத்துக்கும் மிக மதிப்புமிக்க சொத்துக்களாக மாறியுள்ளன. வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் செல்வ உற்பத்தியில் தொழில்முனைவோரின் பங்களிப்பு பாராட்டத்தக்கது.

தெற்காசியாவின் பொருளாதார மறுமலர்ச்சியானது, இந்தியாவினதும் இலங்கையினதும் முயற்சியாண்மைகள் மற்றும் தொழில்முனைவோரின் இயங்குதளத்திலேயே தங்கியுள்ளது.

எனவே, புத்தாக்க சிந்தனைகளுடன் முதலீட்டாளர்களும், தொழில்முயற்சியாளர்களும் இலங்கையிலுள்ள வர்த்தக வாய்ப்புகளைப் பயன்படுத்தி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்க முன்வர வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

74 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

52 0 0