உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

டொலர் அதிகரிப்பு தற்காலிகமே; நாடு மீண்டும் வீழ்ச்சியடையாது.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
32 பார்வைகள்

அண்மைக்காலமாக அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்து வருவதானது, இலங்கை மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதைக் குறிக்கவில்லை என்றும், தவறான பிரசாரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும் பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ கேட்டுக்கொண்டுள்ளார்.

டொலரின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் ரூபாவின் வீழ்ச்சி குறித்து எழுந்துள்ள கேள்விகளுக்கு ஊடகங்களிடம் பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள தற்போதைய மாற்றம், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலவரங்கள் உள்ளிட்ட உலகளாவிய வெளிப்புறக் காரணிகளுடன் தொடர்புடையதாகும். இதன் காரணமாகவே, குறிப்பாக இறக்குமதிகளுக்காக அமெரிக்க டொலருக்கான தேவை சந்தையில் தற்காலிகமாக அதிகரித்துள்ளது.

ஒரு நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியில் உள்ளது என்று கூறுவதாயின், அங்கு பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படுதல், உற்பத்தித் துறைகள் முடங்குதல், தொழிலாளர் போராட்டங்கள் வெடித்தல் மற்றும் அரசால் தனது செலவினங்களுக்கான நிதியைத் திரட்ட முடியாமல் போதல் போன்ற பாரதூரமான சூழ்நிலைகள் காணப்பட வேண்டும். ஆனால், அத்தகைய எந்தவொரு மோசமான நிலையும் இன்று நாட்டில் இல்லை.

தற்போதைய சூழலில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம், சுற்றுலாத்துறை மூலமான வருவாய் மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பணவனுப்பல் ஆகிய அனைத்தும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சந்தையில் டொலருக்கான தேவை தற்காலிகமாக அதன் விநியோகத்தை விட அதிகரித்ததே அண்மைக்கால மாற்று வீத உயர்வுக்குக் காரணமாக அமைந்தது.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து அண்மையில் கிடைக்கப்பெற்ற சுமார் 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, நாட்டின் வெளிநாட்டு கையிருப்புகளை வலுப்படுத்தியுள்ளதுடன், வெளிநாட்டுத் துறைசார் ஸ்திரத்தன்மைக்கும் பெரும் ஆதரவாக அமைந்துள்ளது.

டொலரின் பெறுமதி தற்காலிகமாக 350 ரூபாவைத் தாண்டிய போதிலும், மத்திய வங்கியின் கொள்கை ரீதியான தலையீடுகள் மற்றும் துரித நடவடிக்கைகள் காரணமாக அது மீண்டும் 330 ரூபா வரை குறைவடைந்தது. கடந்த சில நாட்களில் மீண்டும் ஒரு சிறிய உயர்வு காணப்பட்டாலும், சந்தை படிப்படியாக ஸ்திரத்தன்மையடையும் என்ற நம்பிக்கை உள்ளது.

எனவே, தற்போதைய சூழ்நிலையானது தற்காலிகமான ஒரு சந்தை ஒழுங்கமைப்பே தவிர, இது பொருளாதார வீழ்ச்சி அல்ல. பொதுமக்கள் யாரும் அச்சமடையவோ அல்லது வதந்திகளின் அடிப்படையில் அவசர முடிவுகளை எடுக்கவோ வேண்டாம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

74 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

52 0 0