உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மாகாண சபைத் தேர்தல் ‘ஓகே’ அதிகாரப் பகிர்வு ‘நோ’

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
17 பார்வைகள்

வடக்கு மாகாண சபைக்குப் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்கும் தேசத்துரோக நடவடிக்கையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னெடுக்கமாட்டார் என நம்புகின்றோம் என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் பிரச்சினை இல்லை. ஆனால் தேர்தலை நடத்தி வடக்கு மாகாண சபைக்குப் பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கினால்தான் பிரச்சினை ஏற்படும்.

இலங்கையில் இதுவரை ஆட்சி புரிந்த எந்தவொரு ஜனாதிபதியும் இந்த வேலையைச் (பொலிஸ், காணி அதிகாரம் பகிர்வு) செய்யவில்லை. தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் இதே அணுகுமுறையை பின்பற்றுவார் என நம்புகின்றோம்.

சிலவேளை பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கினால் இந்த நாடு பெடரல் ராஜ்யமாகும். அவ்வாறு நடந்தால் இதுவரை காலமும் பாதுகாத்து வந்த ஒற்றையாட்சி முறைமை இல்லாமல்போகும். இது தேசத்துரோக நடவடிக்கையாகவே அமையும். இவ்வாறானதொரு செயலை ஜனாதிபதி செய்வார் என நம்பவில்லை.” – என்றார் சரத் வீரசேகர.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

74 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

52 0 0