உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பணத் தகராறில் தம்பியை கொ*லை செய்த அண்ணன்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
29 பார்வைகள்

மாத்தறை மாவட்டம், திக்வெல்லை பகுதியில் பணக் கொடுக்கல் – வாங்கல் பிரச்சினை காரணமாக அண்ணன் ஒருவரால் தம்பி கூரிய ஆயுதத்தால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சோகச் சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 41 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

மதுபோதையில் இருந்த 45 வயதுடைய அண்ணன், தம்பியின் வீட்டுக்குள் கூரிய ஆயுதத்துடன் அத்துமீறி நுழைந்துள்ளார். அங்கு இருவருக்கும் இடையே ஏற்பட்ட தர்க்கம் கைகலப்பாக மாறிய நிலையில், அண்ணன் தனது தம்பியைக் கூரிய ஆயுதத்தால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த தம்பி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து, நான்கு பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய சந்தேகநபரான அண்ணனைப் பொலிஸார் உடனடியாகக் கைது செய்துள்ளனர்.

இந்தக் கொலைச் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

74 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

53 0 0