உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

ஆசிரியர்களின் அநீதியான இடமாற்றங்களுக்குத் தீர்வு காண்க.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
25 பார்வைகள்

ஆசிரியர்களின் பதவி உயர்வுகள், சம்பள முரண்பாடுகள் மற்றும் அநீதியான இடமாற்றங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு வழங்குமாறு கோரி, ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளது.

பிரதமர் மற்றும் கல்வி அதிகாரிகளுடனான இக்கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. ஆசிரியர்களின் பதவி உயர்வுகள், வலய மட்ட செயல் சான்றிதழ் சிக்கல்கள் மற்றும் 3/2 சம்பள முரண்பாட்டு உயர்வைப் பெற்றுக்கொள்வது உள்ளிட்ட 8 முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்காகவே இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் நீடித்த இக்கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின்,
“கடந்த 2021ஆம் ஆண்டு முதல் ஆசிரியர்களின் பதவி உயர்வுப் பிரச்சினைக்கு முறையான தீர்வு எதுவும் வழங்கப்படவில்லை. தற்போதைய அரசாங்கம் பதவியேற்று ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், பரீட்சை முறைகள் மற்றும் வலய மட்ட செயல் சான்றிதழ் அறிக்கைகளில் நிலவும் குளறுபடிகளால் ஆசிரியர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், மாகாண ஆளுநர்களின் தன்னிச்சையான செயற்பாடுகள் கல்வித்துறையைச் சீரழித்து வருகின்றன. குறிப்பாக, வடக்கு மாகாணத்தில் இடமாற்ற சபையின் அனுமதியின்றி, ஆளுநரின் தன்னிச்சையான அதிகாரப் பிரயோகத்தின் மூலம் 125 ஆசிரியர்கள் அநீதியான முறையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறித்து பிரதமரின் கவனத்திற்குக்கொண்டு சென்றுள்ளோம்.

பாடசாலை மட்டங்களில் அதிபர், ஆசிரியர் இடமாற்றங்கள் மற்றும் மாணவர் சேர்க்கை விவகாரங்களில் அதிகாரிகள் எவ்வித தீர்க்கமான முடிவுகளையும் எடுக்காமல் மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்து வருகின்றனர்.

எனவே, நடப்பு ஜூன் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் எங்களது நியாயமான கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்படாவிட்டால், ஜூன் 30 ஆம் திகதிக்குப் பின்னர் நாடு தழுவிய ரீதியில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்குவதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை” – என்று ஜோசப் ஸ்டாலின் எச்சரித்தார்.

இக்கலந்துரையாடலில் வண. மஹிந்தவங்ச தேரர், யல்வெல பஞ்ஞாசேகர தேரர் உள்ளிட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

74 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

53 0 0