உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
24 பார்வைகள்

கற்பிட்டி, தழுவைக் கடலில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் உட்பட மூவர் அலைகளில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்த சோகச் சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

புத்தளம், தில்லையடி பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞன் ஒருவரும், 18 மற்றும் 19 வயதுடைய இரு இளம் பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

நேற்று மாலை இவர்கள் தங்களது குடும்பத்தினருடன் தழுவைக் கடற்கரைக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு அவர்கள் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த வேளையில், வீசிய பலத்த காற்றுடன் கூடிய பாரிய கடல் அலையில் சிக்கி எதிர்பாராதவிதமாகக் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கடலில் மூழ்கியவர்களைக் காப்பாற்ற உறவினர்களும் பிரதேச மக்களும் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்ட போதிலும், அவர்கள் மூவரும் சடலங்களாகவே மீட்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காகப் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்தச் சோக சம்பவம் குறித்து நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

74 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

53 0 0