உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

செப்டெம்பரில் பாரிய நெருக்கடி.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
25 பார்வைகள்

எதிர்வரும் செப்டெம்பர் மாதமாகும்போது இலங்கையில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்றும், நாட்டில் ‘கோட்டாபய – 02’ போன்றதொரு நிலைமை கூடத் தோற்றம் பெறலாம் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினரும் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான நிரோஷன் பாதுக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது,
“டொலரைக்கூட முறையாக நிர்வகிக்க முடியாத ஓர் ஆட்சியே தற்போதைய திசைகாட்டி அரசாகும். இதனால் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆகும்போது இந்த நாடு பாரியதொரு பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும். இந்த நெருக்கடியை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் கட்டுப்படுத்தவோ அல்லது நிர்வகிக்கவோ முடியாமல் போகும்.

நான் இன்று ஒரு முக்கிய இரகசியத்தைக் குறிப்பிடுகின்றேன். அதாவது ‘மூன்றெழுத்து’ தொடர்பில் அடுத்த 4 மாதங்களுக்குள் இந்த அரசு தீர்க்கமான அரசியல் முடிவொன்றை எடுக்கவுள்ளது. ‘மூன்றெழுத்து’ என்றால் என்னவென்று என்னிடம் கேட்க வேண்டாம். அது எமது கட்சியான எஸ்.பி.ஜே. (ஐக்கிய மக்கள் சக்தி) அல்லது யு.என்.பி. (ஐக்கிய தேசியக் கட்சி) கிடையாது.

அந்த மூன்றெழுத்துடன் இந்த அரசு தீர்க்கமான முடிவுக்குச் சென்ற பிறகு, நாட்டில் ‘கோட்டாபய – 02’ போன்றதொரு மக்கள் எழுச்சி நிலைமை உருவாகும். நாம் இதற்கு முன்னர் எச்சரித்துக் கூறிய அனைத்தும் நாட்டில் நடந்துள்ளன.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

74 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

53 0 0