உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

யாழ். பல்கலைக்கழகத்தில் வெசாக் கூடுகள் சேதம் – காவலாளிகளிடம் தீவிர விசாரணை!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
20 பார்வைகள்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் கூடுகள் இனந்தெரியாத நபர்களால் உடைத்து சேதமாக்கப்பட்டமை தொடர்பில், அங்கு கடமையிலிருந்த மூன்று காவலாளிகளிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த வெசாக் பண்டிகையை முன்னிட்டு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்களால் பல்கலைக்கழக வளாகத்தினுள் வெசாக் கூடுகள் அமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன.

இவ்வாறு அலங்கரிக்கப்பட்டிருந்த வெசாக் கூடுகள், இரவு வேளையில் இனந்தெரியாத சிலரால் உடைத்துச் சேதமாக்கப்பட்டிருந்தன.

இந்தச் சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இதன் தொடர்ச்சியாக, வெசாக் தினத்தன்று பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று காவலாளிகள் நேற்று கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு, அவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

74 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

53 0 0