கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர்வெட்டு.!
கொழும்பின் பிரதான நீர் விநியோக கட்டமைப்பில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இந்த திடீர் தடங்கல் அம்பத்தலையிலிருந்து கொலன்னாவை வரை நீர் விநியோகம் செய்யும் பிரதான விநியோகக் குழாயிலேயே ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று (5) இரவு 8.00 மணி வரை பல பகுதிகளில் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி ராஜகிரிய, நாவல, மொரகஸ்முல்ல, ஒபயசேகரபுர மற்றும் கொலன்னாவை நகர சபை அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.