உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

இலங்கையில் இடம்பெற்றது இனப் படுகொ*லை அல்ல என்ற கருத்திற்கு கண்டனம்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
25 பார்வைகள்

இலங்கையின் பேராயர் மல்கம் ரஞ்சித் அவர்களுடைய ஊடகப் பேச்சாளர் அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பில் இன்று வடக்கு, கிழக்கு சிவில் அமைப்பு பிரதிநிதிகள் தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை அல்ல. அது பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தம். அதிலே பயங்கரவாதிகள்தான் கொல்லப்பட்டார்கள். பொதுமக்கள் எவரும் கொல்லப்படவில்லை என்ற கருத்திற்கே தமது கண்டனங்களை பதிவிட்டிருந்தனர்.

இதில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் வபிதா வசந்தன் அடிகளார், காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவர் இரத்தினசிங்கம் முரளீதரன், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குனரும் அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.ஆ.ஜோதிலிங்கம், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன், குரல் அற்றோரின் குரல் அமைப்பின் தலைவர் கோமகன், கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் தலைவரும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ். மாவட்ட இணைப்பாளருமான இன்பநாயகம், தமிழர் மரவுரிமை பேரவையின் ஒருங்கிணைப்பாளர் சரவணன் உட்பட வடக்கு கிழக்கிலிருந்து பல்வேறு பொது அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

76 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0