உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

கோர விபத்தில் சிக்கி படுகாயமடைந்த தாயும், மகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
26 பார்வைகள்

புத்தளம் – அனுராதபுரம் வீதியின் 27ஆம் கட்டை பகுதியில் கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற கோர விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாயும், அவரது இளம் மகளும் அடுத்தடுத்து சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக ராஜாங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்தில் 52 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான சமுத்ரா அலுவிஹார மற்றும் தனியார் நிறுவனம் ஒன்றில் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வந்த அவரது மூத்த மகளான 32 வயதுடைய சஜீனி மகேஷிகா ஆகிய இருவருமே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கடந்த முதலாம் திகதி இவர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிளும், முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் படுகாயமடைந்த இருவரும் உடனடியாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மகள் கடந்த 2ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், தொடர்ந்தும் உயிருக்காகப் போராடி வந்த தாயும் நேற்று (04) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து ராஜாங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

76 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0