உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

யாழில் சங்கிலிய மன்னனின் 407 ஆவது சிரார்த்ததின நிகழ்வுகள்..

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
18 பார்வைகள்

இரண்டாம் சங்கிலிய மன்னனின் 407வது சிரார்த்த தினத்தை முன்னிட்டு யாழில் அமைந்துள்ள சங்கிலிய மன்னன் அரண்மனையில் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற உள்ளதாக சங்கிலிய மன்னன் அறக்கட்டளையின் செயலாளர் சிவத்தொண்டர் சிறீந்திரன் தெரிவித்தார்.

இன்று வியாழக்கிழமை யாழில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சைவத்தையும் தமிழையும் வளர்ப்பதற்கு அரும்பாடுபட்ட இரண்டாம் சங்கிலிய மன்னனின் சிராத்த தினத்தை ஏழு வருடங்களாக செய்து வருகிறோம்.

அந்த வகையில் எதிர்வரும் ஆறாம் சனிக்கிழமை காலை 9 மணிக்கு யாழ் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள சங்கிலிய மன்னனின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கும் நிகழ்வு இடம்பெறும்.

அதனைத் தொடர்ந்து ஜமுனா எரிக்கு ஊர்வலமாகச் சென்று பூஜை வழிபாடுகள் இடம் பெற்று பின்னர் சங்கிலிய மன்னனின் அரண்மனையில் நிகழ்வுகள் ஆரம்பமாகும்.

இம்முறை விசேடமாக சங்கிலிய மன்னனின் வாழ்க்கை வரலாற்றை கண்காட்சியாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில் குறித்த நிகழ்வுக்கு சைவ அடியவர்கள் அனைவரும் பங்கு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

76 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0