உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

நினைவேந்தலுக்கு ஏற்பாடு செய்தமை தொடர்பில் வாக்கு மூலம் வழங்கினார் வலி. கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர்!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
27 பார்வைகள்

தியாகி பொன். சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தமை தொடர்பில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கோப்பாய் பொலிஸாரினால் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதல் வித்தாக நஞ்சருந்தி தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாகி பொன். சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தல் நிகழ்வு, உரும்பிராயில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலையடியில் நாளை வெள்ளிக்கிழமை காலை 8:00 மணிக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் உத்தியோகபூர்வமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தீர்மானத்துக்கு அமைவாக, உத்தியோகபூர்வமாக இந்த நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஈ.பி.டி.பி. கட்சியைச் சேர்ந்தவர்களினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாகவே, வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக தெரிய வருகன்றது.

இந்த விசாரணையின் போது, பிரதேச சபையின் உத்தியோகபூர்வ தீர்மானத்துக்கு அமைவாகவே இந்நாளில் நினைவேந்தல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தவிசாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்த பின்னர் பொலிஸார் தவிசாளரை விடுவித்துள்ளனர்.

இந்நிலையில் நினைவேந்தல் நிகழ்வு திட்டமிட்டபடி நாளை வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் உத்தியோகபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது என்று தவிசாளர் தியாகராஜா நிரோஷ் அறிவித்துள்ளார்.

உரும்பிராய் சந்தியில் அமைந்துள்ள தியாகி பொன். சிவகுமாரனின் நினைவிடத்தில் ஈகைச்சுடரேற்றல் மற்றும் நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன என்றும், இந்த நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் பிரதிநிதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரையும் உணர்வுபூர்வமாகப் பங்கெடுக்குமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

76 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0