உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சிவனொளிபாத மலையில் இளைஞர்களினால் குப்பைகளை அகற்றும் பணி முன்னெடுப்பு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
22 பார்வைகள்

சிவனொளிபாத மலைப் பருவக்காலத்தை முன்னிட்டு, புனித பூமியையும் அதன் இயற்கைச் சூழலையும் பாதுகாக்கும் நோக்கில், இளைஞர்கள் குழுவொன்று இணைந்து குப்பைகளை அகற்றும் பாரிய தூய்மைப்படுத்தல் பணியொன்றை முன்னெடுத்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் சிவனொளிபாத மலைக்கான யாத்திரைக் காலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் பல்லாயிரக்கணக்கில் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் சில பயணிகள் வீசிச் செல்லும் பிளாஸ்டிக் போத்தல்கள், பொலித்தீன் பைகள் மற்றும் திடக் கழிவுகள் இப்பகுதியின் அரிய பல்லுயிர்ச் சூழலுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன.

சிவனொளிபாத மலைப் பருவக்காலத்தை முன்னிட்டு, புனித பூமியையும் அதன் இயற்கைச் சூழலையும் பாதுகாக்கும் நோக்கில், இளைஞர்கள் குழுவொன்று இணைந்து குப்பைகளை அகற்றும் பாரிய தூய்மைப்படுத்தல் பணியொன்றை முன்னெடுத்துள்ளது.

இந்த சூழல் மாசடைதலைத் தடுப்பதற்காக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த தன்னார்வ இளைஞர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து இத்தூய்மைப் பணியை ஆரம்பித்துள்ளனர்.

சிவனொளிபாத மலையின் நல்லதண்ணிப் பாதை மற்றும் இரத்தினபுரிப் பாதைகளில் சிதறிக்கிடந்த டன் கணக்கிலான பிளாஸ்டிக் மற்றும் உக்காத கழிவுகளை இவர்கள் அசாத்திய முயற்சியுடன் சேகரித்து வருகின்றனர்.

புனித பூமியையும் அதன் இயற்கை அழகையும் ரசிக்க வரும் பயணிகள், தங்களின் குப்பைகளை ஆங்காங்கே வீசாமல், அதற்குரிய இடங்களில் மட்டுமே போட வேண்டும் அல்லது மீண்டும் தங்களுடனேயே எடுத்துச் செல்ல வேண்டும்” என இத்தன்னார்வக் குழுவினர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இளைஞர்களின் இந்த முன்மாதிரியான சமூகப் பணிக்கு அப்பகுதி மக்கள் தங்களது பாராட்டுகளையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

76 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0