உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

செம்மணி மனிதப் புதைகுழியில் உடைந்த மண்டையோட்டுக் குவியல்கள்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
26 பார்வைகள்

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது, சிறுவர்களினது எனப் பலத்த சந்தேகிக்கப்படும் 4 எலும்புத் தொகுதிகள் உட்பட புதிதாக மேலும் 5 மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 15ஆம் நாள் அகழ்வு நடவடிக்கைகள் நேற்றுப் புதன்கிழமை நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, தடயவியல் நிபுணர்கள் முன்னிலையில் இடம்பெற்றது.

நேற்றைய அகழ்வின் போது சிறுவர்களினது எனச் சந்தேகிக்கப்படும் 4 எலும்புத் தொகுதிகள் உட்பட புதிதாக 5 மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த 6 மனித எலும்புத் தொகுதிகளும் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, இதுவரை செம்மணி மனிதப் புதைகுழியின் தடயவியல் அகழ்வாய்வுத் தளம் ஒன்று மற்றும் இரண்டிலிருந்தும் மொத்தமாக இதுவரை 275 மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 272 மனித எலும்புத் தொகுதிகள் தற்போது முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், நேற்று அகழ்வுகளின் போது மனித எலும்புக் குவியல்கள் இரண்டும் புதிதாக அடையாளம் காணப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு எலும்புக் குவியலில் மனித மண்டையோடுகள் உடைந்த நிலையில் சிதைந்த துண்டுகளாகக் காணப்படுகின்றன. அவ்வாறு கண்டெடுக்கப்பட்ட அனைத்து மனித எச்சங்களும் சட்ட மருத்துவ நிபுணர்களால் முறைப்படி சேகரிக்கப்பட்டு, நீதிமன்றக் கட்டுக் காவலில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, நேற்று வரையிலான முதல் 15 நாட்கள் இடம்பெற்ற அகழ்வுகளின் போது மட்டும் இதுவரை 34 மனித எலும்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

76 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0