உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை இழுத்தடிக்கின்றது.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
22 பார்வைகள்

மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் என்ற நம்பிக்கை எல்லோரிடமும் இருக்கின்றது. தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் நாங்களும் அந்த உரிமைகளை அனுபவிக்க வேண்டும். அதிகாரப் பகிர்வு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என அம்பாறை மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

சமகால அரசியல் தொடர்பில் நேற்று புதன்கிழமை(03) இரவு கல்முனை பகுதியில் விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டு செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் தனது கருத்தில் குறிப்பிட்டதாவது,
எமது நாட்டில் கடந்த காலங்களில் மாகாண சபை அதிகாரங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது. அண்மைக் காலங்களில் புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்ட நிலையில் இந்த மாகாண சபை முறைமை இன்றும் கூட இழுபறியான நிலைமையில் காணப்படுகின்றது. தற்போது எமது கட்சியின் சார்பாக சுமந்திரன் மற்றும் சாணக்கியன் உள்ளிட்டோர் மாகாண சபை தொடர்பில் அதிக அக்கறை செலுத்தி வருகின்றார்கள். எனவே தான் மாகாண சபை தேர்தல் நடைபெறும் என்ற நம்பிக்கை எல்லோரிடமும் இருக்கின்றது.

இந்த நாட்டின் தலைவர் ஊழலற்ற நிர்வாகத்தை நடாத்த வேண்டும் என்ற அடிப்படையில் சில முன்னெடுப்புக்களை மேற்கொண்டிருந்தாலும் நாங்கள் தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் அந்த உரிமைகளை அனுபவிக்க வேண்டும். அதிகார பகிர்வு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் இருந்த அரசாங்கங்கள் இந்த மாகாண சபைக்கு இருந்த அதிகாரங்களை கட்டம் கட்டமாக குறைத்து இந்த மாகாண சபை முறைமையை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற அடிப்படையை கையாண்டு கொண்டிருக்கின்றது.

ஆனால் இந்த அரசாங்கமானது மக்களுக்கு தேர்தல் காலங்களில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி இருந்தது. இதில் ஆட்சி அதிகாரங்களை கையாள்கின்ற போது மாகாண சபை அதிகாரங்களை வழங்குவோம் என்ற வாக்குறுதிகளை வழங்கி இருந்தார்கள். ஆனால் இதுவரைக்கும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அத்துடன் இந்த அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளில் ஏதோ இழுத்தடிக்கின்ற நடைமுறைகளை தான் கொண்டிருக்கின்றது. எதிர்காலங்களில் இந்த நாட்டின் ஜனாதிபதி அவர்கள் சிறுபான்மை மக்களின் மனங்களை வெல்லக் கூடியதாக எதிர்வரும் காலங்களில் அவரது நடவடிக்கை அமைய வேண்டும். மாகாண சபை மாத்திரமன்றி இன ரீதியான பிரச்சினைகளுக்கும் அவர் தீர்வினை பெற்றுத்தர வேண்டும்.

அவ்வாறு அவர் செயற்படுகின்ற போது தான் இந்நாட்டில் சிறுபான்மையினராக உள்ள மக்கள் ஒரு ஜனநாயக ரீதியான ஒரு ஊழலற்ற அரசாங்கம் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் மீண்டும் அவர் ஜனாதிபதியாக அம்மக்களினால் தெரிவு செய்யப்பட்டு இந்த நாட்டின் நீண்ட கால அரசியலை முன்னெடுப்பதற்கு உதவியாக இருப்பார் என நம்புகின்றேன்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் “நீதிக்கான நீள் பயணம்” கவனயீர்ப்புப் பேரணி!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்…

11 0 0
இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

77 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0