உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சுவருடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து – ஆடை நிறுவன உரிமையாளர் பலி!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
19 பார்வைகள்

காலி, ஹினிதும வைத்தியசாலைக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியின் பக்கவாட்டிலிருந்த சுவருடன் மோதி விபத்துக்குள்ளானதில், ஆடை நிறுவன உரிமையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் படுகாயமடைந்த நிலையில், உடனடியாக மீட்கப்பட்டு உடுகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், அவர் வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்படுவதற்கு முன்னரே உயிரிழந்திருந்தார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவ்வாறு விபத்தில் சிக்கி உயிரிழந்தவர் மண்டலபுர பகுதியைச் சேர்ந்த ஆடை நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் எனப் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த விபத்து தொடர்பில் ஹினிதும பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

38 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

55 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

62 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் “நீதிக்கான நீள் பயணம்” கவனயீர்ப்புப் பேரணி!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்…

22 0 0