உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

கினிகத்தேன -ஹட்டன் பிரதான வீதி சேதம் – பொதுமக்கள் அச்சம்!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
34 பார்வைகள்

கினிகத்தேன -ஹட்டன் பிரதான வீதியில் உள்ள தியாகல சந்தி பகுதியில் கினிகத்தேனவை நோக்கிச் செல்லும் பேருந்து தரிப்பிடத்தில் முன்னாள் உள்ள வீதியின் ஒரு பகுதி உடைந்து புதைந்து உள்ளதால், அந்த தரிப்பிடத்தில் உள்ள பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

மழை நாட்களில், சாலையில் பாயும் மழைநீர் இந்த உடைந்த இடத்திலிருந்து உள் நோக்கிப் பாய்கிறது. இதனால், பேருந்து தரிப்பிடத்தின் சாலையும் புதைந்துபோகும் அபாயம் அதிகமாக உள்ளது.

இப்போதெல்லாம் பெய்துவரும் கனமழையால் விபத்து ஏற்படுவதற்கு முன்பு, இந்த இடத்தில் ஏற்பட்ட உடைப்பைச் சரிசெய்ய வீதி அபிவிருத்தி அதிகாரசபை உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ்நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகாரசபை உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

21 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

40 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

44 0 0