உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

நிறைவுக்கு வரும் சிவனடி பாத மலை யாத்திரைக் காலம்.

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
27 பார்வைகள்

2025/2026 சிவனடி பாத மலை பருவ காலம் கடந்து 2025 டிசம்பர் மாதம் பௌர்ணமி நாளில் ஆரம்பமானது.

தொடர்ந்து ஆறு மாதங்களாக இப் பருவகாலம் இடம் பெற்று வந்த நிலையில் இன்று வைகாசி விசாகம் பௌர்ணமி நாளில் காலை 10.30 மணி தொடக்கம் 1.30 மணி வரை வரும் சுப வேளையில் சிவனடி பாத மலை உச்சியில் இருந்து சமன் தெய்வம் மற்றும் ஆபரணங்கள் பூஜை பொருட்கள் என்பன இரத்தினபுரி பலாபத்பல குருவிட்ட வழியாகவும், நல்லதண்ணி நோட்டன் வழியாகவும், நல்லதண்ணி பொகவந்தலாவ பலங்கொட வழியாக கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வைகாசி மாதம் வைகாசி விசாகம் பௌர்ணமி நாளான 31 ம் திகதி இவ் வருட பருவ காலம் நிறைவுக்கான விஷேட பிரித் வைபவம் இடம் பெற்ற பின்னர் 2025/2026 க் கான சிவனடி பாத மலை பருவ காலம் சுப வேளையில் நிறைவு பெற உள்ளது.

இன்றைய தினம் சுவாமிகள் நல்லதண்ணி நகருக்கு லக்சபான இராணுவ முகாம் வீரர்கள் இணைந்து பல்லக்கில் வைத்து எடுத்து வரப்பட்டு நல்லதண்ணி நகரில் உள்ள பௌத்த மத்திய நிலையத்தில் வைத்து நல்லதண்ணி நகரில் உள்ள அனைத்து வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் வணங்கிய பிறகு சிவனடி பாத மலைக்கு பொறுப்பான பெங்கமுவ தம்மதின்ன மஹநாயக்க தேரர் அவர்களின் வழிகாட்டலில் சுவாமிகள் பூஜை பொருட்கள் மற்றும் ஆபரணங்கள் மூன்று வழிகளில் மிகவும் பாதுகாப்பான முறையில் எடுத்து செல்ல பட்டு இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள கல்பொத்தாவில ரஜமஹா விகாரையில் அங்கு சுப வேளையில் பிரதிஷ்டை செய்ய பட உள்ளது என சிவனடி பாத மலைக்கு பொறுப்பான பெங்கமுவ தம்மதின்ன மஹநாயக்க தேரர் தெரிவித்தார்.

மேலும் எதிர் வரும் டிசம்பர் மாதம் பௌர்ணமி நாளில் மீண்டும் 2026/2027 க்கான சிவனடி பாத மலை பருவ காலம் ஆரம்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

20 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

39 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

44 0 0