உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

கட்டிலில் இருந்து தவறி விழுந்த குழந்தை மரணம்!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
25 பார்வைகள்

அனுராதபுரம், கெக்கிராவை பிரதேசத்தில் பெற்றோருடன் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு வயது ஆண் குழந்தை ஒன்று, எதிர்பாராதவிதமாகக் கட்டிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளது.

இந்தத் துயரச் சம்பவம் நேற்று சனிக்கிழமை அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளது.

நேற்று அதிகாலை மேற்படி குழந்தை பெற்றோருடன் கட்டிலில் நித்திரையில் இருந்துள்ளது.

இதன்போது, குழந்தை திடீரெனக் கட்டிலில் இருந்து உருண்டு அருகில் இருந்த தரைப்பகுதியில் தவறி விழுந்துள்ளது.

இதில் அக்குழந்தையின் தலைப் பகுதியில் பலத்த அடிபட்டுக் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளதுடன், குழந்தை உடனடியாக அவ்விடத்திலேயே மயக்கமடைந்துள்ளது.

குழந்தை மயக்கமடைந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக அக்குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.

எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே குழந்தை உயிரிழந்துவிட்டது என்று அங்கிருந்த கடமை நேர வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பெற்றோரின் கண் முன்னாலேயே இரண்டு வயதுக் குழந்தை இவ்வாறு உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

21 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

40 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

44 0 0