உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் நிறுவனங்களும் எரிபொருட்களின் விலைகளை உயர்த்தியுள்ளன.

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
31 பார்வைகள்

லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்களும் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தங்களது எரிபொருள் விலைகளை உயர்த்தியுள்ளன.

இருப்பினும், சினோபெக் நிறுவனம் சுப்பர் டீசல் விலையில் மாத்திரம் எந்தவொரு திருத்தத்தையும் மேற்கொள்ளவில்லை.

அவர்கள் தற்போதும் ஒரு லீற்றர் சுப்பர் டீசலை 600 ரூபாய் என்ற விலையிலேயே விற்பனை செய்து வருகின்றனர்.

நேற்று நள்ளிரவு முதல் அனைத்து வகையான எரிபொருட்களினதும் விலைகளை அதிகரிக்க பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்திருந்தது.

அதன்படி: 410 ரூபாயாக இருந்த ஒரு லீற்றர் ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை 24 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 434 ரூபாய் ஆகும்.

அதேபோல், 470 ரூபாயாக இருந்த ஒரு லீற்றர் ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 495 ரூபாய் ஆகும்.

மேலும், 392 ரூபாயாக இருந்த ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 407 ரூபாய் ஆகும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

458 ரூபாயாக இருந்த ஒரு லீற்றர் சுப்பர் டீசலின் விலை 20 ரூபாய் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 478 ரூபாய் ஆகும்.

இதேவேளை, ஒரு லீற்றர் 265 ரூபாயாக இருந்த மண்ணெண்ணெய் விலை 20 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன் புதிய விலை 285 ரூபாய் ஆகும் என லங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

20 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

39 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

44 0 0