உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பேரணி: விதிமுறைகளை மீறியதாக மூவர் கைது!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
37 பார்வைகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு  சமாந்தரமாக, போக்குவரத்து விதிகளை மீறி வீதியில் மோட்டார் சைக்கிள் பேரணியில் ஈடுபட்ட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புத் தலைக்கவசங்கள் இன்றி மோட்டார் சைக்கிள்களில் சென்ற இந்த நபர்கள் குறித்து பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் யாழ். புத்தூர் சந்தியில் இருந்து கொடிகாமம் ஊடாக கிளிநொச்சி நோக்கிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிள்களின் இலக்கத் தகடுகளைக் கொண்டு உரிமையாளர்களைத் தேடி கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில், சந்தேகநபர்கள் கடந்த 18ஆம் திகதி விஸ்வமடு சந்தியில் ஒன்றிணைந்து முல்லைத்தீவு வீதியூடாக முள்ளிவாய்க்கால் நோக்கிச் சென்றமை கண்டறியப்பட்டது.

இத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, புதுக்குடியிருப்பு பொலிஸார் இன்று (23) காலை சந்தேகநபர்கள் மூவரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் கவனக்குறைவாக மோட்டார் சைக்கிள் செலுத்தியமை, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வாகனங்களைச் செலுத்தியமை மற்றும் பாதுகாப்புத் தலைக்கவசம் அணியாது பயணித்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களின் கீழ் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

40 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

50 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

38 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

40 0 0