உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

இந்து சகோதரர்களின் போர் சம நிலையில் நிறைவு!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
45 பார்வைகள்

இந்து சகோதரர்களின் போர் என்று அழைக்கப்படும் மானிப்பாய் இந்து கல்லூரிக்கும், சாவகச்சேரி இந்து கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்ட போட்டியானது இன்றையதினம் சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

நேற்றையதினம் ஆரம்பித்த போட்டியானது இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெற்ற நிலையில் சமநிலையில் முடிவடைந்தது.

நேற்றையதினம் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சாவகச்சேரி இந்துக் கல்லூரியானது களத்தடுப்பை தெரிவு செய்த நிலையில், மானிப்பாய் இந்துக் கல்லூரி துடுப்பெடுத்து ஆடியது.

முதலாவது இன்னிங்ஸில் மானிப்பாய் இந்துக் கல்லூரி 9 இலக்குகளை இழந்து 213 ஓட்டங்களை பெற்றது.

தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய சாவகச்சேரி இந்துக் கல்லூரி அணியினர் சகல விக்கட்டுக்களையும் இழந்து 208 ஓட்டங்களை பெற்றிருந்தனர்.

இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மானிப்பாய் இந்துக் கல்லூரியானது இரண்டு இலக்குகளை இழந்து 45 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

மூன்றாவது வருடமாக இடம்பெறும் இந்த போட்டியானது வெற்றி தோல்வி இன்றி நிறைவடைந்தது.

கடந்த இரண்டு வருடங்களும் போட்டியானது வெற்றி தோல்வியின்றி சமநிலையிலேயே நிறைவடைந்தது.

இறுதியில் பரிசளிப்பு வைபவம் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பாடசாலைகளின் அதிபர்கள், விருந்தினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர், கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

45 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

50 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

38 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

40 0 0