உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

நாடு மீண்டும் வீழ்ந்தால் மீளவே முடியாது! – முன்னாள் நீதி அமைச்சர் எச்சரிக்கை

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
44 பார்வைகள்

பிரதான அரசியல் கட்சிகள் பலவீனப்படுத்தப்பட்டதன் காரணமாக, நிர்வாக அறிவும் அரசியல் தெளிவும் அற்ற குழுக்களிடம் நாட்டின் அதிகாரம் செல்லும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என முன்னாள் நீதி அமைச்சர்  விஜயதாஸ ராஜபக்ஷ எச்சரித்துள்ளார்.

இலங்கையின் 54ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்  நடைபெற்ற விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

“கடந்த முறையைப் போல இந்த முறையும் நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்தால், அதிலிருந்து மீண்டெழுவது எளிதான காரியமல்ல.

கடந்த முறை பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது நமக்கு உதவி செய்வதற்குப் பல நாடுகள் முன்வந்தன.

ஆனால், இம்முறை நாடு மீண்டும் வீழ்ந்தால் எழும் நம்பிக்கையை வைக்க முடியாது.

எனவே, நாட்டின் மீது பற்றுள்ள அனைவருக்கும் வீழ்ச்சியடையப் போகும் இந்த நாட்டைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உள்ளது.

இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற ஜனநாயக நாடுகளில் காணப்பட்டதைப் போன்று இலங்கையிலும் இரண்டு பலமான பிரதான அரசியல் கட்சிகள் இருந்தன.

ஆனால் நம் நாட்டில் அவ்வப்போது ஆட்சிப் பொறுப்பிலிருந்த தலைவர்கள், ஐக்கிய தேசியக் கட்சியையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் சுயலாபங்களுக்காக உடைத்து பலவீனப்படுத்தினார்கள்.

அதன் கசப்பான விளைவை இன்று ஒட்டுமொத்த நாடும் அனுபவித்து வருகின்றது.

இவ்வாறான பின்னணியில், தமக்கு முறையான நிர்வாக அறிவோ அல்லது அரசியல் தெளிவோ இன்றி அரச அதிகாரத்தைக் கைப்பற்றப் போவதாகக் கூறும் குழுக்களின் முயற்சி, ஜனநாயகம் மற்றும் மக்களின் அடிப்படை உரிமைகளை அழிக்கும் ஒரு சர்வாதிகாரப் போக்காகும்.” – என்று விஜயதாஸ ராஜபக்ஷ எச்சரித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

45 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

50 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

38 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

40 0 0