உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மன்னார் முந்தல் பகுதிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமாயிலான குழுவினர் கள விஜயம்

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
31 பார்வைகள்

மன்னார் பள்ளிமுனை முந்தல் கடற்கரையோர பகுதியில் அமைந்துள்ள அந்தோனியார் சிற்றாலய பகுதிக்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையிலான குழுவினர் நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

அண்மையில் ஏற்பட்ட டிற்வா புயல் காரணமாக குறித்த அந்தோணியார் சிற்றாலயம் சேதமடைந்துள்ளது.

குறிப்பாக பள்ளிமுனை உள்ளடங்களாக குறித்த முந்தல் அந்தோணியார் சிற்றாலய பகுதியூடாக தொழிலுக்குச் செல்லும் மீனவர்கள் குறித்த ஆலயத்தை தரிசித்து விட்டு செல்வது வழமை.

குறித்த ஆலயம் பள்ளிமுனை புனித லூசியா ஆலய நிர்வாகத்தின் கீழ் உள்ளமையினால் பள்ளிமுனை புனித லூசியா ஆலய அருட்பணி சபையினர் குறித்த ஆலயத்தின் தற்போதைய நிலை குறித்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்த நிலையில் குறித்த ஆலயம் அண்மையில் ஏற்பட்ட புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் மன்னார் நகர பிரதேச செயலாளர் கே.காந்தீபன்,மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் நகர சபை உறுப்பினர்களான சபா மைக்கல் கொலின் ரஜனி பிகிராடோ மற்றும் பள்ளிமுனை பங்குத்தந்தை ,பள்ளிமுனை புனித லூசியா ஆலய நிர்வாக பிரதிநிதிகள் ,பள்ளிமுனை மக்கள் ஆகியோர் பள்ளிமுனை கடற்கரையில் இருந்து படகு மூலம் முந்தல் அந்தோணியார் சிற்றாலயத்தை சென்றடைந்தனர்.

பின்னர் குறித்த குழுவினர் சேதமடைந்துள்ள குறித்த சிற்றாலயத்தை பார்வையிட்டதோடு அங்கு சென்ற பள்ளிமுனை புனித லூசியா ஆலய நிர்வாகத்தினருடன் கலந்துரையாடியதுடன் சேதமடைந்த ஆலயத்தை புனர் நிர்மானம் செய்வது தொடர்பாகவும் கலந்துரையாடி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

20 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

50 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

38 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

40 0 0