உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பொலிஸ் தடுப்புக் காவலிலிருந்த கைதியொருவர் உயிரிழப்பு!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
24 பார்வைகள்

பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலிலிருந்த கைதியொருவர் உயிரிழந்த சம்பவமொன்று மட்டக்களப்பில் பதிவாகியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் நேற்று இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கரடியனாறு கித்துள் பிரதேசத்தைச்சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 50 வயதுடைய சுப்பையா வசந்தகுமார் என்பவரே உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனையின் பேரில் வவுணதீவு பொலிஸ் குழுவொன்று கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்குவந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளது,

குறித்த நபர் மதுபானம் அருந்திவிட்டு அடிக்கடி வீட்டில்  தகராறில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்றைய தினம் குறித்த நபரின் மனைவி கரடியானாறு பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டினையடுத்து பொலிஸார் வீட்டிற்குச் சென்று அவரைக் கைதுசெய்திருந்தனர்.

இது தொடர்பிலான விசாரணைக்காக கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு சற்றுநேரத்தில் அந்நபர் மயக்க நிலையடைந்ததாகவும் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டவேளை மரணமடைந்ததாகவும்                    பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் குறித்த நபர் பொலிஸாரினால் தாக்கப்பட்டே உயிரிழந்துள்ளதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இவரது சடலம் கரடியனாறு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இவரது தலையின் பின்புறத்தில் இரத்தக் கசிவு காணப்படுவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

45 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

50 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

38 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

40 0 0