உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்கள வளாகங்களில் தேங்கியுள்ள இலக்க தகடுகள்!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
39 பார்வைகள்

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்டு, இதுவரை பெற்றுக்கொள்ளப்படாத வாகன இலக்கத் தகடுகளை ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் விரைவாகப் பெற்றுக்கொள்ளுமாறு மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த ஆண்டுகளில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் அச்சிடப்பட்ட நிலையில், இதுவரை வாகன உரிமையாளர்களால் பெற்றுக் கொள்ளப்படாத சுமார் ஒரு இலட்சம் வாகன இலக்கத் தகடுகள் திணைக்கள வளாகங்களில் தேங்கியுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு மாவட்டம் சார்பாக நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திலும், நாடளாவிய ரீதியில் உள்ள ஏனைய மாவட்ட அலுவலகங்களிலும் வாகன இலக்கத் தகடுகள் குவிந்துள்ளன.

எனவே 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் வாகன இலக்கத் தகடுகளுக்கு விண்ணப்பித்து, அவற்றை இதுவரை பெற்றுக்கொள்ளாத அனைத்து வாகன உரிமையாளர்களும் ஜூன் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மேலதிக தகவல்களை பெற வேண்டுமாயின் 011-2033333 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக திணைக்களத்தைத் தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

59 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

57 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

57 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

44 0 0