உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

அம்பலாந்தோட்டை கொ*லைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
37 பார்வைகள்

அம்பலாந்தோட்டை, மாமடல, பொகுட்டயாய பிரதேசத்தில் நபரொருவரின் கழுத்தை துண்டித்து கொ*லை செய்து, அவரது தலையை மாமடல சந்தியிலுள்ள சிலையொன்றில் தொங்கவிட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ‘கருணே லொக்கா’ எனப்படுபவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவருக்கு எதிராகப் பல குற்றவியல் வழக்குகள் தொடர்பாக நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த கொ*லை சம்பவம் கடந்த 11ஆம் திகதி இரவு நடைபெற்றிருந்தது.

அவர் கொ*லை செய்யப்பட்டதன் பின்னர், அவரது தலை அம்பலாந்தோட்டை மாமடல சந்தியில் அமைந்துள்ள சிலையின் கைகளுக்கு மேல் வைக்கப்பட்டிருந்தது.

கொ*லை செய்யப்பட்ட நபர் இதற்கு முன்னர் மாமடல பிரதேசத்தில் இடம்பெற்ற முக்கொ*லை சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டவர் என்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்த விசாரணைகளின் போது அம்பலாந்தோட்டை போலீஸ் அதிகாரிகள், சந்தேகநபர் ஒருவரை அப்பகுதியிலேயே கைது செய்திருந்தனர்.

பின்னர், தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேகநபர்கள் லுணுகம்வெஹெர பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையில்  கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் ஜூன் மாதம் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இதற்கமைய, அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் சந்தேகநபர் மாமடல பகுதியில் நடமாடுவதாகத் தகவல் கிடைத்திருந்தது.

இதன்போது உடனடியாகச் செயற்பட்ட அம்பலாந்தோட்டை போலீஸ் அதிகாரிகள், நேற்று (21) இரவு சந்தேகநபரை மாமடல பகுதியில் வைத்து கைது செய்தனர்.

சந்தேகநபரிடம் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் அவர் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

63 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

61 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

59 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

47 0 0