இரட்டைக் கொலைச் சந்தேக நபரை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை!
ஹட்டனில் இடம்பெற்ற இரட்டைக் கொலையுடன் சம்பந்தப்பட்டதாக கருதப்படும் நபரை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஹட்டன் டிக்கோயா பகுதியில் முதிய தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டனர்.
இச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள ஹட்டன் தலைமையக பொலிஸார் அந்நபரை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
அந்நபர் நரைத்த குட்டையான தலைமுடி, சுருக்கங்கள் நிறைந்த முகம் உடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிர் நீல நிற குட்டைக்கை சட்டை அணிந்திருப்பதுடன், ஒரு பையுடனும் நீல நிற ஹெல்மெட்டுடனும் காணப்படுகிறார்.
இந்நிலையில் துல்லியமான தகவல் வழங்குபவர்களுக்கு பணப்பரிசு வழங்கப்படும் என்றும் தகவல் வழங்குபவர்களின் விபரங்கள் இரகசியமாக வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் தெரிந்தோர் 0512222222
அல்லது 0761670258 அல்லது 0718591117 போன்ற இலக்கங்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது