உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி, வலிகாமம் வடக்கு பகுதி மக்கள் தொடர்ந்தும் போராட்டம்!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
25 பார்வைகள்

வலிகாமம் வடக்கு பகுதிகளில் உள்ள தங்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இராணுவத்தினரின் “கொமாண்டோ” பங்களா முன்பாக இன்று ஐந்தாவது வாரமாகவும் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் வடக்கில் 249, 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த பொதுமக்கள், கடந்த 1990ஆம் ஆண்டு  யுத்தம் காரணமாக தமது சொந்த இடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்.

அன்றிலிருந்து இன்று வரை சுமார் 36 வருடங்களாக அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயங்களாகவே பிரகடனப்படுத்தப்பட்டு இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது.

யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், தங்களின் சொந்த நிலங்களிலிருந்து பாதுகாப்புத் தரப்பினர் இன்னும் வெளியேறவில்லை என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள தங்களின் நிலங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, காணி உரிமையாளர்கள் கடந்த பல வருடங்களாகப் பல்வேறு வடிவங்களில் போராடி வருகின்றனர்.

எனினும், இதுவரை உரிய தீர்வு கிடைக்காத நிலையிலேயே, வாராந்தம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொடர் போராட்டங்களை முன்னெடுப்பதாக மக்கள் தீர்மானித்து, இன்று 5 ஆவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

அத்துடன் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் வெசாக் பௌர்ணமி தினம் வரை, உயர்பாதுகாப்பு வலய எல்லைப் பகுதி முழுவதும் கறுப்புக்கொடிகளைப் பறக்கவிட்டுப் பாரிய அளவிலான எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக காணி உரிமையாளர்கள் இதன்போது அறிவித்தனர்.

இந்த நீதிக்கான போராட்டத்தில் கட்சி பேதமின்றி அனைத்து அரசியல்வாதிகளும், அரச நிர்வாக உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு தங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என போராட்டக்காரர்கள் பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று நடைபெற்ற வாராந்தப் போராட்டத்தில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் நேரில் கலந்துகொண்டு, மக்களின் நில உரிமைப் போராட்டத்துக்குத் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

63 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

61 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

59 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

47 0 0