முச்சக்கரவண்டி கவிழ்ந்து விபத்து; மூன்று மாதக் குழந்தை உயிரிழப்பு.!
நிட்டம்புவ – ருவன்வெல்ல வீதியின் கோனகல பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 மாதக் குழந்தை உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (21) பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தின்போது வாகனத்தின் பின்இருக்கையில் பயணித்த பெண்ணும், அவரது குழந்தையும் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி 3 மாதமேயான பெண் குழந்தை உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த குழந்தை கோனகல பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளில் ருவன்வெல்ல பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.