இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து.!
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்றும் பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதைத் தொடர்ந்து, பேருந்தில் பயணித்த ஒரு பாடசாலை மாணவன் காயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து ஹட்டன் – பொககவந்தலாவை பிரதான வீதியில் உள்ள நோர்வூட் வென்சர் தோட்டப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (22) காலை சுமார் 7.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஹட்டனில் உள்ள பாடசாலைக்கு பொகவந்தலாவையிலிருந்து மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்துக்கு எதிர்த்திசையில், ஹட்டனிலிருந்து பொகவந்தலாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த பாரவூர்த்தி மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து நடந்த நேரத்தில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட சுமார் 20 பேருந்தில் பயணித்துள்ளனர்.


